மகனுக்கு ஓர் கடிதம்
*மகனுக்கு ஓர் கடிதம்* .
பள்ளிக்குப் போனாய்...
சரியாகப் படிக்கவில்லை
என்று ....
பிரம்படி பட்டாய் ...
தட்டுத்தடுமாறி
கல்லூரியில் நுழைந்தாய்...
கண்ணடி பட்டாய்...
போகட்டும் விடு என்று
அவளையே கட்டிவைத்தேன் ...
அடியே ! ...நீயே எல்லாம்
என்று ...
அவளடியே கதி என
அடிமைப்பட்டுக் கிடந்தாய்...
வேலைக்கு போ...
என்று அனுப்பிவைத்தால் ...
குடிக்கு அடிமைபட்டு ....
கடையின் அடியே
கதி எனக் கிடக்கிறாய் ...
அடி மேல் அடி
விழுந்தால் ...
அப்பனால் என்ன செய்ய?
என்று கடிந்தாலோ?....
வாயடித்துச் சத்தியம்
செய்கிறாய் ...
இனி...அடியேன்
அடி பணிவேன்
என்று ...
அடிக்கடி
நினைவு தப்பும் எனக்கு
உன் அடியில்
ஒதுங்கலாம் என
நினைத்தால்...
அதற்குள்
நீ என்னை
மண்ணடிக்குள்
சீக்கிரம் விழ
வைத்து விடுவாயோ
என்று என் அடிமனம்
பதறுகிறது.
இப்படிக்கு ....
அடிப்படையில்
அடி பல பெற்ற
உன் அப்பன்.