கடுகின் காரம்
எந்த அறையிலிருந்து
காரம் வந்ததென
கடுகிடம் கேட்டேன்...
நீயே கண்டுபிடி
என்று...
தன்னுடலை விரித்துக்
காட்டியது.... கடுகு.
சும்மாவா சொன்னார்கள்...
கடுகு சிறுத்தாலும்
காரம் குறையாதென்று.
(கடுகின் தோற்றத்தைப்
படம் பிடித்த புகைப்படக்காரருக்கு நன்றி).