கல்யாணம் ஆன பின்பும் கனவுகள் தொடருதே
பூங்காவில் அழகிய பூக்களுடன் பூத்தாள்
என்னை நோக்கி புன்முறுவல் பூத்தாள்
சாலையில் என்னிடம் மனதை கொடுத்தாள்
கண்ணால் என்மேல் கணை தொடுத்தாள்
பேருந்தில் பக்கம் மெத்தென அமர்ந்தாள்
கடற்கரையில் வாசமுடன் மலர்ந்தாள்
ஆட்டோவில் இடைவெளியே இல்லை
அவள் இடை என் கையை விடவில்லை
சொகுசு பஸ்சில் இருக்கை சொகுசு இல்லை
அவளின் ஸ்பரிசம் பட்டு தூக்கமே இல்லை
குளு குளு ரயிலில் இருவரும் பயணம்
இருந்தும் சூடாக பட்டது அவள் மணம்
ஆகாய விமானத்தில் அவளோடு பறந்தேன்
அவள் அருகாமையில் என்னை மறந்தேன்
ராக்கெட்டில் அவள் ஒரு பாகம் நான் ஒரு பாகம்
தெரிந்துகொண்டேன் அவளது தாகத்தின் வேகம்
திடீரென கட்டிலிலிருந்து தொப்பென கீழே விழுந்தேன்
" எவண்டா காலங்கார்த்தால பெல்லை அழுத்துறான்"
கல்யாணம் ஆன பின்பும் கனவுகள் தொடருதே
தெரியாத பார்க்காத பெண்ணை பின் தொடருதே
ஆனந்த ராம்