கிருமி

நோய் பற்றிய பொழுது காப்பாற்றிய
கண் காணா கடவுளின் வடிவம்
சிலையாக கூட வழி படலாம் என்றார்
கண்ணுக்கு தெரியாத கிருமி அளித்த
நோயால் அவதிப்பட்ட பொழுதும்
உயிரைக் பரி கொடுத்து
சிலையாக மாறிய பொழுதும்
ஏனோ எவருக்கும் தெரியவில்லை
கல்லும் கடவுளும்
மருத்துவரின் இதயமும்
அச்சத்தில் தெரிந்தது
வெறும் கிருமி மட்டுமே
ஆத்திரத்தில் தெரியாதது
மனிதநேயம் மட்டுமே

எழுதியவர் : (26-Jun-21, 2:39 pm)
சேர்த்தது : சந்தியா
Tanglish : kirumi
பார்வை : 51

மேலே