என் அருகில் நீ

என் அருகில் நீ இல்லாமல்
கண்ணே ...மணியே
கற்கண்டு சுவையே
மானே ..தேனே ..
மல்லிகை ,,முல்லையே
என்று கவிதை எழுதும்
கவிஞர் போல்
கற்பனையில்
சொல்லி மகிழ்ந்தேன் ...!!

இப்போது ..
என் அருகினில் நீ இருக்க
நான் கற்பனையில்
சொன்ன வார்த்தைகள் யாவும்
பொய்யல்ல ..உண்மைதான்
என்பதை உணர்ந்து மகிழ்ந்தேன் ..!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (28-Jun-21, 9:16 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : en ARUGIL nee
பார்வை : 218

மேலே