ஆதலால் காதலால் அவள் பா

வளையோசை வசந்தத் தென்றலில் கவிபாடுது
இளைய ராணியுன் இதழ்தவழ் பாடலை
கிளையமர் பூங்குயிலும் மகிழ்ந்து கேட்குது
தளைதட்டா என்வெண்பா புன்னகை சிட்டே

-----ஒரே எதுகை நாலு சொல் அல்லது நாலு சீர் நாலு வரிஅல்லது அடி
பாவினதை யாப்பார்வலர் அறிவீர்கள்

பாவினத்தை பா வடிவில் கொண்டுவருவோம்
புன்னகையை இங்கே வெண்பா என்று உவமைப் படுத்தி
இருக்கிறேன்
தளை தட்டா வெண்பா என்று என்னை உவமையாக்கி
தளை விதிகள் தேவையற்ற விருத்தத்தை எழுதுகிறாய்
என்பா எங்கே என்று வெண்பா கோவித்துக்கொள்ளும்

ஆதலால் காதலால் அவள் பா வெண்பாத் தோழிக்கு

வளையோசை மென்வசந்தத் தென்றலில் பாட
இளையஎன் ராணி இதழ்தவழ் பாடல்
கிளையமர் பூங்குயி லும்மகிழ்ந்து கேட்க
தளைதட்டா வெண்பா உனக்கு !

----ஒருவிகற்ப இன்னிசை வெண்பா

நேரிசையை எங்கே என்று கேட்பாளே தோழி

வளையோசை மென்வசந்தத் தென்றலில் பாட
இளைய அவளிதழில் பாடல் - விளைப்பூங்
கிளையமர் பூங்குயி லும்மகிழ்ந்து கேட்க
தளைதட்டா வெண்பா உனக்கு !

கவிக்குறிப்பு :

விளைப்பூங்
கிளையமர் பூங்குயி லும் ---தென்னந் தோப்பு மாந்தோப்பு
என்பதை விளை என்று சுருக்கமாகச் சொல்வார்கள்
தேங்காய் மாங்காய் கொய்யா விளையுமிடம் விளை
காரணப்பெயர்
இவ்விளையில் பூமலர்க் கிளையில் பூங்குயிலும்
என்று பொருள் கொள்ளவும்

எழுதியவர் : கவின் சாரலன் (28-Jun-21, 10:27 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 54

மேலே