சொல்லேன் காதலா
" திட்டு திட்டாக ஆசை மேகங்கள், சொட்டு சொட்டாக, இன்ப மழை
தூவுதே!
கட்டுக்கட்டாக சேர்ந்த நினைவுகள்,
தொட்டு தொட்டு, நெஞ்சையும்,
பட்டு பட்டு, உணர்வையும்,
விட்டு விட்டு வதைக்குதே!
பிட்டு பிட்டு தனியே வைத்தாலும்,
மட்டு மட்டு படுத்தி பார்த்தாலும்,
தட்டு தட்டு என மனக்கதவை தட்டுதே!
கெட்டு கெட்டு போகாமல்,
அதை தடுப்பதெப்படி ?
இதுதான் ' காதலா ' ?
கொஞ்சம் சொல்லேன், 'காதலா" ?