அன்பு மனைவிக்கு

என் இனிய துணைவியே
துன்பம் எனக்கு வருகையிலே
துணையாய் இருந்தாயே
இன்னல் எனக்கு வருகையிலே
கண் இமையாய் காத்தாயே
நீ இல்லாத நினைவுகளில் கண்ணீர் பெருகுதடி
கண் இமையாய் நீ இருந்து
என் கண்ணீரில் நினைந்திடடி
என் கண்ணீரில் நினைந்த
என் கண்மணியே கண் இமையை
என் கையால் உன்னை தொடமாட்டேன்
உன் கண்ணில் இனிமேல் நீர் வர விடமாட்டேன்.
என் உயிரின் உணர்ச்சி புள்ளியே
உன் உயிர் உள்ளவரை என் உயிர் நிலைக்கும்
நீ இல்லை என்ற நிலை வந்தால்
என் உயிரும் மரிக்கும்
என் உயிரின் பூரணத்துவமே
என் உடலாலும் உயிராலும் ஆன்மாவாலும்
உன்னை வணங்குகிறேன்.
வாழிய பல்லாண்டு
வாழ்விப்பாய் பல்லாண்டு
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாண்டு சூரியனாய் நீ வெளிச்சம் தர நிலவாய் வாழ்ந்திடுவேன்
என்றென்றும் உன் ஒளியில்
உயிர் விடும் நிலை வந்தாலும்
என் உயிர் பிரியும் உன் மடியில்
அன்புடன் ஒரு முத்தம். ❤️❤️❤️❤️❤️❤️

- இராம.ஆனந்தன்.

எழுதியவர் : இராம.ஆனந்தன் (28-Jun-21, 9:11 am)
சேர்த்தது : Rama Anandan
Tanglish : anbu manaivikku
பார்வை : 89

மேலே