சிறுநீரின் குணம் - எண்சீர் ஆசிரிய விருத்தம்

எண்சீர்க் கழிநெடில் ஆசிரிய விருத்தம்
(காய் காய் மா தேமா அரையடிக்கு)

அங்கியுவ ருறைசிறுநீர் வாதம் போக்கும்
..அதைப்பருகி லிருமலிரைப் பரத்த நோயும்
பொங்கிவரும் மேகவிகா ரங்கி ரந்திப்
..புண்களும்போம் அதைநசியம் புரியிற் சூடுந்
தங்கியதோர் அபஸ்மாரஞ் சந்நி யாசஞ்
..சருவவிஷம் விஷசுரமுந் தவருண் டோடும்
இங்கதனைத் தொட்டலம்பிற் கண்மு கங்கா(து)
..இவ்விடத்துள் எழும்விரணம் இரியுங் காணே

- பதார்த்த குண சிந்தாமணி

முறைப்படி பருகினால் இருமல், சுவாசம், அசிர்க்கரம், மேக மூத்திரம், கிரந்திப்புண் ஆகியவை போகும்;. நசியம் செய்தல் சுரம், அபஸ்மாரம், பல்வகை விடம், விடசுரம் இவை நீங்கும்; அந்நீரால் கழுவினால் விழி, முகம், செவி ஆகியவற்றில் பிறக்கின்ற கட்டிகள் விலகும்;

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Jun-21, 8:41 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 25

மேலே