காதலிக்க ஆளில்லை
கல்லூரிக் காலத்தில்
எனக்கென
பல நாளாய்...தேடினேன்
ஒரு காதலியை.
என்னுடன் படித்தவர்களோ...
எனக்குப் பிறகு
படிக்கின்ற... பெண்களிலோ ...இப்படி
தேடுதல் ... நெடுநாட்கள்
தொடர்ந்தது ...
ஆளுக்கு ஒன்று
என... பல பேர்
பழகிய காலங்களில்
எனக்கென...
எவளும் இல்லையே?
என்று ... பல நாள்
ஏங்கியதுண்டு ...
காலங்கள்
பல கடந்தன...
பெற்றோர் பார்த்த
பெண்ணை மணமுடித்து ...
எனக்கும் ஒரு
மகன் பிறந்து ...
அவனும் கல்லூரிக்குச்
சென்று வந்த போது ...
எதேச்சயாக...
நான் படித்த கல்லூரிக்குச்
செல்ல வேண்டிய
சந்தர்ப்பம் வந்தது...
என் வகுப்புத் தோழி
அங்கே ...
விரிவுரையாளராய்
இருப்பதைக் கண்டேன்...
பேசிக் கொண்டிருந்தபோது...
தற்செயலாகக் கேட்டேன் ...
கல்லூரிக் காலங்களில்
எனக்கு மட்டும்
இப்படி ...
காதல் வசப்படவில்லையே
ஏன்?...என்றேன்...
பல நாட்களாய்
எனக்குள் கிடந்த சந்தேகம்...
அதற்கு அவள் சொன்னாள் ...
எல்லோரும்
பேசப்....பழகக்
காதல்கொண்டனர்...
நீ மட்டும் தான்
திருமணம் செய்ய
ஆளைத் தேடினாய்...
என்றாள்.