போசன முதலில் நெய் சேர்த்துண்பது - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

பருப்பிலெழு வெப்பும் பருங்குடன்மு றைப்புந்
திருப்புறா முன்மலத்தின் சிக்குந் - தரிப்புறா
மெய்க்குள்ள காந்தி விலகா தழகுறுநன்
னெய்க்குள்ள உண்மை நெறி 1

புத்திமிகுஞ் சிக்குவைநோய் போயொழியும் நேத்திரத்தில்
மெத்த வொளியும் விளங்குங்காண் - பித்தமொடு
வாதகப மாறா வறட்சியெல் லாநீங்குங்
கோதினறு நெய்யைக் குடி 2

- பதார்த்த குண சிந்தாமணி

உண்ணத் தொடங்கும் போது நெய் சேர்த்துண்பதால் துவரம் பருப்பின் சூடு, குடல் குத்தல், மலக்கட்டு, சிக்குவை நோய், பித்தம், வாதம், கபதோடம், சொறி இவை நீங்கும். நினைவாற்றல், அழகு, கண்ணுக்கொளி இவை உண்டாகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Jul-21, 4:16 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 40

மேலே