நன்றாகச் சமைத்த துவரம்பருப்பு - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

தண்ணக் குறிஞ்சித் தலத்தா டகிப்பிளப்பை
வண்ணச் சுடற்றற்குள் வைத்தாக்கி - யுண்ணற்
கடிக்குப் பசுவினறு மாச்சியத்தோ டுண்ணிற்
பிடிக்குப் பிடிசதையாம் பேசு

- பதார்த்த குண சிந்தாமணி

நீர்ப்பற்றுள்ள மலை நாட்டுத் துவரம்பருப்பைச் சமைத்துப் பசு நெய்யுடன் கலந்துண்டால் பிடி அன்னத்திற்குப் பிடி சதை வளரும் என்பர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Jul-21, 4:03 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 15

மேலே