எம்ஜிஆருக்கே ஆலோசனைக் கூறிய சசிகலா

மூன்றாம் பிள்ளைப் பெற்றவளுக்கு
முதல் பிள்ளைப் பெற்றவள் குழந்தைப்பெற
எளிய வைத்தியம் சொன்னாளாம்

அரிசி மாவை சீக்கிரம் உலர்த்த
சுழற்றி அடிக்கும் காற்றின் உதவியை
நாடிடவே வழிவகை பண்ணாராம் நாட்டாமை

கொள்ளிக் கட்டைக் கொண்டு
அதிகமாய் அரிக்கும் தலையை
சொறியச் சொன்னாளாம் அன்பான அன்னை

என்னவோ போங்க மின்னுவதெல்லாம்
பொன்னு மாதிரி தன்னை எண்ணிக்கொண்டு
தங்கம் நிகரான விலைக்கு கெக்கலிக்குது.
------ நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (1-Jul-21, 8:54 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 43

மேலே