வளர்வதை அறியாதவன்

"பருவத்தே பயிர் செய்"
என்று அறிந்த
விவசாயிக்கு ....

புகைத்து பயிர் செய்த...
புற்றுநோய்ப் பயிர்...
தன் நுரையீரலில்
வளர்வது ....

அவன் உயிரை
அறுவடை செய்யும் ...வரை
தெரியாமலே போய்விட்டது.

எழுதியவர் : PASALI (3-Jul-21, 6:00 am)
சேர்த்தது : PASALI
பார்வை : 77

மேலே