இதயமெதுவும்

கூவும் குயிலின் ஓசை அவள்
பேசும் குரல் தானோ ...
ஆடும் மயிலின் தோகை அவள் வருடும் விரல் தானோ ...
ஆலம் வேரின் விழுது அவள்
வாறும் கூந்தல் தானோ ...

காணாமலே காதல் வருமோ...
தூங்காமலே கனவு வருமோ ...
பேசாமலே வார்த்தை வருமோ...
சொல்லாமலே சோகம் தீருமோ ...

தேடாமல் பொருள் கிட்டுமா ...
விடியாமல் சேவல் கூவுமா ...
இருளாமல் நிலவு தெரியுமா ...
நீங்காமல் நினைவு திரும்புமா ...

சிறகில்லாமல் பறக்கச்
செய்தாயே நீ...
படகில்லாமல் மிதக்கச்
செய்தாயே நீ ...
மழையில்லாமல் நனையச் செய்தாயே நீ ...
தாயில்லா பிள்ளைபோல் தவிக்கச்
செய்தாயே நீ ...

விழியின் வழி வருதே
மௌனத்தின் மொழி தருதே ...
என்னைத் தள்ளி நீ நீங்காதே
இதயமெதுவும் தாங்காதே ...

எழுதியவர் : BARATHRAJ M (3-Jul-21, 8:02 pm)
சேர்த்தது : BARATHRAJ M
பார்வை : 115

மேலே