மூச்சுக்கு முந்நூறு முறை

மச்சானே மச்சானே ...

மூச்சுக்கு முந்நூறு முறை
ஒ பேச்சே
நீயும் நானும் ஒன்னாச்சே ...

மச்சானே மச்சானே ...

எனக்கு எப்பவும்
உன்ஞாபகமாச்சே ...

நண்பா நண்பா ...
நான் இங்கு நலம் நலமே
நீ அங்கு நலம் நலமா
நலமறிய நான் ஆவலே...

நட்புக்குள்ளே
ஆட்டம்பாட்டம்
கொண்டாட்டமே ...
நாளெல்லாம் ஒரே
ஆர்ப்பாட்டமே ...

நட்புக்காலம்..!
அது
கலகல காலமே
அது
கடகடனு போகுமே ...

நட்புக்கு நாட்குறிப்பே
தேவையில்ல
நீங்காமல் இருக்குமே
நினைவிலே ...

பழகிட தயக்கம் தாமதம்
ஏதுமில்ல ...
காதல்போல் கலக்கம் ஏதும்
தந்ததில்ல ...

வாழ்வின் எண்ணங்கள்
வேறுவேறு
தாழ்ச்சி சொல்லாத புதுப்புது சொந்தங்கள் நம் நட்போடு ...

ஒன்றான மேகக்கூட்டங்கள் கலையும்
அன்று மட்டும்
கண்ணீர் மழையில் விழிகள்
நனையும்

நண்பா
நம் வஞ்சனை இல்லா
நட்புக்கு
எழுதவா நாவல்...

நம் ஒப்பனை இல்லா
நட்புக்கு
அதிகமே ஆயுள் ...

எழுதியவர் : BARATHRAJ M (4-Jul-21, 12:31 pm)
சேர்த்தது : BARATHRAJ M
பார்வை : 318

மேலே