நில்லாதொழியும் நோய்
பஃறொடை வெண்பா ஒவ்வொரு அடியாகக் குறைந்து அளவடி,சிந்தியல்,குறள் வெண்பாக்களாகிறது
============================================================================================
பல்லா யிரமக்கள் பாரில் வதைபட்டுச்
சொல்லா தழுதிட சுற்றத்தைக் கொல்வதில்
இல்லாத் துயரினை எல்லோர்க்கும் நல்கிய
பொல்லாப் பிணியினைப் போக்கத் துணிந்திடின்
நில்லா தொழிந்திடும் நம்பு
**

***