இதயம் தொட்ட அலைகள்
எண்ணமே அலையாய்ச் சாடி
...எங்குமே நினைவில் ஆடும் !
வண்ணமாய் அவளின் எண்ணம் !
...வாலிப அலைபோல் பாயும் !
மண்ணிலே வாழும் காலம்
... மனசெலாம் காதல் ஏக்கம் !
மண்ணினுள் செல்லும் போதும்
... மறந்திடா காதல் மோதும் !
வாழ்ந்ததோ சிறிது நாளாம்
...வாழ்விலே பெரிதாம் காதல் !
ஆழ்ந்திடும் எண்ணம் எல்லாம்
...ஆழிபோல் அலையாய் வீசும் !
சூழ்ந்திடும் நினைவி னுள்ளே
... சுட்டிடும் நினைவு முண்டு !
வாழ்ந்திடும் காலம் மட்டும்
...வாழ்க்கையை ரசித்தே வாழு !
மரு.ப.ஆதம் சேக் அலி
களக்காடு.

