என்னை அசரவைத்த தேவதைநீ
மான்விழி மலர்முக எழிலினி
தேன்மொழி தெவிட்டா தமிழமுதினி
போன்வைத்த மாடர்ன் பூங்காதினி
வான்பொழி முகில்நிகர் குழலினி
சொல்லு திற்கும் செவ்விதழினி
சொல்லுடன் சுவைதரும் சிரிப்பினி
மெல்ல நடக்கும் ஹம்சினி
சொல்ல நினைத்தது என்னடி ?
வெல்லும் இருவேல் விழியினி
சொல்லும் தமிழால் சுவைநீ
கல்லில் வடித்தால் சிலைநீ
சொல்லாமல் வந்தஅந்தி மாலைநீ
தென்றல் தழுவிடும் பூங்குழலினி
தென்னைபோல் அசையும் மேனியெழிலினி
மின்னலை வெளியிடும் ஒளிவிழியினி
என்னை அசரவைத்த தேவதைநீ !

