பூமேனி நடக்கிறாள் வாங்கிய செல்பேச்சில் பீச்சில்

மூங்கில் தண்டு மூக்கு முல்லைச் சிரிப்பினில்
வீங்கிளவே னில்தென்றல் காற்று கூந்தல் அழகினில்
தாங்கும் தாமரை பூந்தளிர் மேனி நூலிடையினில்
வாங்கிய புதுச்செல்போன் காதினில் நடக்கிறாள் சூடிதாரிணி !

-----ஐஞ்சீர் நெடிலடி கலித்துறை

மூங்கில் இளம்தண்டு மூக்குமுல் லைச்சிரிப்பு
வீங்கிளவே னில்தென்றல் காற்று கருங்கூந்தல்
தாங்கிடும் நூலிடை தாமரை பூமேனியை
வாங்கியசெல் காதினில் நடக்கிறாள் சூடிதாரிணி !

----நாலுசீர் கலிப்பாவின் வேறு பாவினம் கலிவிருத்தம்

மூங்கில் இளம்தண்டு மூக்குமுல் லைச்சிரிப்பு
வீங்கிள வேனில்தென் றல்காற் றினில்கூந்தல்
தாங்கிடும் நூலிடைபூ மேனி நடக்கிறாள்
வாங்கியசெல் பேச்சில்பீச் சில்

----ஒரு விகற்ப இன்னிசை வெண்பா
பீச் ---BEACH --ஆங்கிலச் சொல் ---கடற்கரை
பேச்சில் பீச்சில் நல்லாயிருக்கு என்று அமைத்தேன்

மூங்கில் இளம்தண்டு மூக்குமுல் லைச்சிரிப்பு
வீங்கிள வேனில்தென் றல்காற் றினில்கூந்தல்
தாங்கிடும் நூலிடைபூ மேனி கடற்கரையில்
வாங்கியகை பேசிபேச் சில்
---இப்பொழுது முற்றிலும் தமிழில் ஒ வி இன்னிசை வெண்பா
ஆனா அவ எந்தமொழியில் பேசுதான்னு நாம் என்னத்தக்
கண்டோம் !!!

எழுதியவர் : கவின் சாரலன் (10-Jul-21, 10:10 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 57

மேலே