பட படத்த இதயங்கள்

பல வருட காத்திருப்பு
சில மாதங்களாய் மாறின
மாதங்கள் வாரங்களாய் கடந்திட
வாரங்கள் இன்று நாட்களானதே
நாட்கள் நெருங்க நெருங்க,
படபடவென நெஞ்சு துடித்திட,
இனம் புரியா ஆவலில்,
அவளின் இதயம் தொட்டேனே,
நாளங்கள் வெடித்திட துடித்தது
புதிய வரவிற்காக,
பஞ்சு விரல்களை கெஞ்சிட,
அழுகுரல் இன்னிசை கேட்டிட,
இருஇதயமும் சேர்ந்து துடிக்கிறது..

ஆசையாய்,
ஷிபாதௌபீஃக்

எழுதியவர் : தௌபீஃக் (10-Jul-21, 10:20 am)
சேர்த்தது : ஷிபாதௌபீஃக்
பார்வை : 101

மேலே