தங்கமும் மனிதனும்

தகரத்தை தங்கமென்றும்
தங்கத்தை தகரமென்றும்
உப்புக்கல்லை வைரமென்றும்
சொல்லும் மனிதர்கள்
நிறைந்த கூட்டத்தில் ...!!

கற்றவர்கள்
சொல்வது எல்லாம்
செவிடன் காதில்
ஊதும் சங்கைபோல் தான்
பயனில்லாமல் போகும் ...!!

மின்னுவது எல்லாம்
பொன்னல்ல என்பது போல்
தங்கத்தை உரசி பார்த்துதான்
அதன் உண்மை தன்மையை
சமுதாயம் ஏற்றுக்கொள்ளுகிறது

மனிதர்களும் அதுபோல் தான்
பழகிய பின்புதான் அவர்களின்
குணங்களும் அறியப்படுகிறது ...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (11-Jul-21, 12:56 pm)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 126

மேலே