பூவினில் உன்னினம் ரோஜா

பூவினில் உன்னினம் ரோஜா
பாவினில் உன்னினம் வெண்பா
நாவினில் உன்னினம் தமிழோ
கோவில் தேவதையும் உனதினமோ

நாவினில் உன்னினம் தமிழோ --IS YOUR MOTHER TONGUE
TAMIL ?
-----------------------------------------------------------------------------------------
யாப்பில் நோக்கின் இது வஞ்சி விருத்தம்

பூவினில் உன்னினம் ரோஜா உயர்தமிழ்ப்
பாவினில் உன்னினம் வெண்பா இனிதான
நாவினில் உன்னினம் தேன்தமிழோ பேரெழில்
கோவில் சிலைவடி வே
----இப்பொழுது ஒ வி இன்னிசை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (14-Jul-21, 10:01 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 116

மேலே