காது கொடு காதலியே

தரையின் மானம்காக்க
ஆடைஅவிழ்த்து கொடுத்திட....வா
வெட்கத்தின் தலைபிடித்து
தூக்கில்தொங்கச் செய்திட....வா
மண்புழு தேகமிரண்டை
மர்மமாய் புதைத்திட....வா
உன்தேகம் எனதாக்கி
உருமாற்றம் அடைந்திட....வா
முடிவில்லா இரவுவரை
முத்தத்தால் மூழ்கிட....வா
கட்டிலாடும் சப்தத்தால்
நிசப்தத்தை நொறுக்கிட....வா
தடுக்கிவிழும் இடமெல்லாம்
தங்கமேனி தழுவிட....வா
விரிக்கும் விழியழகில்
விண்மீனாய் மொய்த்திட....வா
வியர்வை துளிகளையெல்லாம்
அடியோடு பிய்த்திட....வா
கதிரவனை களவாடி
தங்கமூலாம் பூசிட....வா
கழுத்தில் இதழ்பதித்து
உன்வெப்பம் உணர்ந்திட....வா
காற்றின் கைப்பிடித்து
கைரேகை பார்த்திட....வா
பித்தமேறும் மீசைக்கு
யுத்தம்செய்து கொன்றிட....வா
வெற்றிகோரும் ஆசைக்கு
முடிவுவைத்து சிரித்திட....வா
எச்சில் ருசியறிந்து
சாகாவரம் பெற்றிட....வா
என்னவளே உனையள்ளி
வேறுலோகம் பறந்திட....வா
காமம் காதல்கொள்ள
நேரம்கொஞ்சம் தந்திட....வா
இருளும் விழியுருட்டி
இரசிப்பதை தடுத்திட....வா
கிறுக்கி உன்வளைவில்
கிறுக்கன்நான் கிறங்கிட....வா
சிறுக்கி உன்னிடையில்
சொல்லாமல் உறங்கிட....வா
கவிஞர்
தமிழ் வழியன்
காதலிக்கத் தெரியாத ஒருவன்
ஒருவளிடம் காதல் கொண்டு அவன் அவளிடத்தில் நேரில் சொல்ல இயலாத மோக வார்த்தைகளை அழகிய இரவை அவளின் காட்சியாக்கி, இருளின் தனிமையை அவன் நினைவின் சாட்சியாக்கி, உயிரின் உணர்வுகளை ஒவ்வொரு சொற்களாக்கி கனவில் கூறும் வார்த்தைகள் இது...
♡ காது கொடு காதலியே ♡
''காது கொடு காதலியே''
காதலில் குதித்து காமத்தில் நீந்தி
கவிதையில் கரையெறிய உணர்வுகள் தான் இக்கவிதையின் வரிகள்