அத்தனையும் அரங்கேறும் அந்தி நாடகம் நீ
புத்தகம் பூமலர் போலும் அழகினில்
முத்துப் பேழையாய் செவ்விதழ் திறக்க
சித்திர விழியில் செங்கோடு ஓட
அத்தனையும் அரங்கேறும் அந்தி நாடகம்நீ
---சித்திர விழியில் செங்கோடு----அல்லது செவ்வரி
பெண்கள் கண்களின் சாமுத்திரிகா இலட்சணம் என்பார்கள்
----------------------------------------------------------------------------------------------------------------
யாப்பார்வலர்கள் ஈரசை மா விளமும் மூவசை காய்ச் சீரும்
விரவி வந்த கலிவிருத்தமாகக் காணவும்