தங்கக்கடன்
தங்கக்கடன்
============
கையிலிருந்த
சில்லரைக் காசையும்
உண்டியலிலிட்டு
பட்டக்கடன் எல்லாவற்றையும்
அடைத்துத் தருமாறு
நேர்த்திக்கடன் வைத்து
மேலும் மேலும் கடனாளியாக
ஆலயத்தை விட்டு வெளியேறும்
அப்பாவி பக்தனுக்கு
நன்றிக் கடனாக எப்போதும்
ஆண்டவன்
தங்கக் கடன் தருகிறான்.
ஆம்!
இவ்வையத்தில் தங்க
உயிர்மூச்சைக் கடனாகவே தருகிறான்
**
மெய்யன் நடராஜ்