முதல் காதல்
சிலருக்கு, பத்து வயது அத்த பொண்ணு!
சிலருக்கு, நிமிடத்திற்கு ஒருமுறை பார்த்திட்ட எதிர்வீட்டு பொண்ணு!
சிலருக்கு, பன்னிரெண்டாம் வகுப்பில் உடன் படித்த பொண்ணு!
சிலருக்கு, கல்லூரி தோழியாக ஒரு கிறிஸ்தவ பொண்ணு!
சிலருக்கு, அவ்வப்போது கனவில் வரும் சிவத்த பொண்ணு!
சிலருக்கு, தன்னுடன் பணி புரியும் கருத்த பொண்ணு!
சிலருக்கு, திருவிழா வெளிச்சத்தில் ஜொலித்திட்ட பொண்ணு!
சிலருக்கு, மழலை மொழி பேசும் மங்கையாக ஒரு பொண்ணு!
சிலருக்கு, பயணத்தின் போது பார்த்த பொண்ணு!
சிலருக்கு, இரண்டு மூன்று வயது மூத்த பொண்ணு!
சிலருக்கு, முகத்திரை அணிந்து முகநூலில் வந்த பொண்ணு!
சிலருக்கு, வரன் பார்த்த வேளையிலே வரமாய் வந்த பொண்ணு!
இப்படி,
ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒருவகையில்
முதல் காதல்
ஒரு பெண்ணின் வாயிலாக தழைத்திருக்கும்,
எனக்குள்ளும் வந்த முதல் காதல்,
ஒரு பெண்ணிடம் தான்!!!
ஆம், என் கையெழுத்தை
அழகாய் மாற்றிய Hero pen'னிடம் !!!😍
$R!