காமம் இல்லா காதல்

சத்தம் தேவையில்லை
விட்டுவிட்டு எரியும் விளக்கை அணை
முதலில் முத்தத்துடன் துவங்கு
பின் உன் முத்தத்தால் என்னை ஈரமாக்கு
என் துயில் அகற்று
தாளிட்ட அறைக்கதவை உடைக்காமல் உள்நுளை
என் கண்கள் இமைக்காது உன்னை ரசிக்கவை
இரவெல்லாம் என்னை நடுங்கவை
என் வியர்வையை நீ உறுஞ்சு
சண்டையிட்டு சரணடை
அவ்வப்போது சற்று இடைவெளியும் விடு
என்னை கொலை செய்ய முயற்சி செய்
உன் குளுமையை என்னுள் ஊற்று
தண்ணீர் தந்து என் தாகம் தீர்
போதும் என்றென்னை சொல்ல விடாதே!!!
அழகிய மழையே,
நானும் மழை காதலன் தான்! ஆனால்,
அது நீ தேவதையாக இருக்கும் போது மட்டுமே!
நீ அரக்கி அவதாரம் எடுத்து,
மிச்சமிருக்கும் மரங்களை சாய்க்கும்போதில்லை!

இப்படிக்கு,
மழைக்காதலன்!!!
$R!

எழுதியவர் : ஸ்ரீனிவாசன் (19-Jul-21, 6:05 pm)
சேர்த்தது : SRINIVASAN
பார்வை : 92

மேலே