கற்பழிப்பு காட்சி

கட்டுடல் மேனி கண்டு
பணத்தாசை பிடித்த அப்பனிடம்
1000 கொடுத்து, இவன் வீட்டுக்கு
அவன் மகளை தூக்கி வந்தான்!
வீடு வந்து சேர்ந்ததும் அவள் உச்சிமுகர்ந்து
பெருமூச்சு விட்டான்!
பின் அவளை இருட்டில் தள்ளி
கதவை தாளிட்டான்!
அதிகாலை 5மணி,
அசந்து தூங்கிய அவளை அடித்து எழுப்பினான்,
சற்று இறுக்கமாய் இருக்கவே சிரமப்பட்டு முடிந்தது
முதல் நாள் கற்பழிப்பு!
அடுத்தநாள் வெளியூர் செல்ல வேண்டியதால்
அன்று இரவு 10மணிக்கு
அரங்கேறியது,
இரண்டாம் நாள் கற்பழிப்பு!
தனிமையில் இவள் கூக்குரலிட்டு
அழுது கொண்டிருக்க, மறுநாள்
கதவை திறந்து வீட்டினுள் நுழைந்தான்
இரண்டு நண்பர்களுடன்!
அதில் ஒருவன் 6ஆறு அடி உயரம்,
மற்றொருவன் 110கிலோ எடை,
மூவரும் வீடு வந்து சேர்ந்ததும்
பயண அசதியில் உறங்கி விட்டனர்!
அலறல் சத்தத்துடன் அலாரம் அடிக்க,
5:30'க்கு ஒருத்தன்,
5:45'க்கு ஒருத்தன்,
6:00'க்கு ஒருத்தன்!
என அடுத்தடுத்து
3முறை கற்பழிக்கப்பட்டாள் அவள்!
மூன்றே நாட்களில்
முக்கால்வாசி கற்பை இழக்க!
அவசரமாய் புறப்பட்டு
வேலைக்கு செல்வதினால்,
அடுத்த மூன்று நாட்கள் அவளை
எட்டிக்கூட பார்க்கவில்லை!
ஒருநாள் மெல்லிய துணிகளை கிழித்து
மறுநாள் முட்களை கொண்டு,
மற்றுமொருநாள் கைகளையே கொண்டு, என
அவள் மீதான சித்திரவதை கோரமுகத்தை எட்டியது!!!
முழு நிலவாய் ஜொலித்த
அவள் அழகு,
ஒரே மாதத்திற்குள்
முற்றிலுமாய் சிதைக்கப்பட்டது!
புதைக்க கூட ஆள் இல்லாமல்
அனாதை பிணமாக
தூக்கி வீசப்பட்டாள்
சுடுகாட்டு ஓரமாய்!
மீண்டும் அந்த பணத்தாசை அப்பனின்
இளைய மகளை, அடிமை விலைக்கு வாங்கி வந்தான்
அவன் காலனிக்கு 👢
கருப்பு அ(ளி)ழிப்பு செய்திட!!!😥
🅂🄷🄾🄴 🄿🄾🄻🄸🅂🄷
$R!

எழுதியவர் : ஸ்ரீனிவாசன் (19-Jul-21, 5:52 pm)
சேர்த்தது : SRINIVASAN
Tanglish : karpazhippu kaatchi
பார்வை : 87

சிறந்த நகைச்சுவைகள்

மேலே