கருப்பர் கூட்டம்

ஒரு ஊரில்
கருப்பர் இன மக்கள்,
நெருக்கமாய் வாழ்ந்து வந்தனர்!
சிலர் நெட்டை, சிலர் குட்டை
சிலர் வலியவர், சிலர் எளியவர்
கடவுள் மீது நம்பிக்கை அதிகம் உள்ள மக்கள்!
நேத்திகடன் என்ற பெயரில்
உயிர் பலிகள் நடக்கும் ஊர் அது!
காலங்கள் ஓடின,
யார் கண் பட்டதோ, கொஞ்சம்
கொஞ்சமாய் ஊர் அழியத்துவங்கியது!
கடும் வறட்சியில் ஒரு கூட்டம்,
சத்து குறைவு காரணமாய் ஒரு கூட்டம்,
தரமில்லாத தண்ணீரினால் ஒரு கூட்டம்,
பேணி காக்க ஆள் இல்லாமல் ஒரு கூட்டம்,
வயது முதிர்ச்சியினால் ஒரு கூட்டம்,
உறவுகள் இழந்த கவலைகள் காரணமாய் ஒரு கூட்டம்!
இப்படி, கொத்து கொத்தாய்
மரணித்து
மண்ணில் புதைந்தார்கள்!
எஞ்சி இருந்த கொஞ்ச உயிர்கள்
கருப்பு இனம் வாழ தகுதி
இல்லாத இடம் என்று எண்ணி,
வெள்ளையனாய் வேடமிட்டு வாழும் அவர்களையும்
கருப்பு சாயம் பூசி சாகடிக்கபார்கிறார்கள்
சில சலூன் கடைகாரர்கள்!!!
"இருக்கத வச்சு மலையை இழுப்போம்,
வந்தா மலை, போனா"
"போனால் போகட்டும் போடா"னு
பாட்டு பாடிட்டு போவோம்!!!
$R!

எழுதியவர் : ஸ்ரீனிவாசன் (19-Jul-21, 5:58 pm)
சேர்த்தது : SRINIVASAN
பார்வை : 56

மேலே