நடுநிசியில் ஒரு கொலை வழக்கு

மெல்லிய வெண்விளக்கு மாத்திரம்
பிரகாசிக்கும் அந்தி சாய்ந்த நேரம்,
அக்கம் பக்கத்தினர் யாவரும்
அரட்டை அடித்த களைப்பில்
கோவை எக்ஸ்பிரஸ் போல
கொட்டாவி விட்டு தூங்க புறப்பட்டனர்...
மக்கள் வாழும் பகுதி
மயானம் போன்ற அமைதியில்
இருளை வடிகட்டிக்கொண்டிருந்தது!!!
ஜன்னல் வழியே
பல நாள் நோட்டமிட்டவர்கள்,
அன்று நால்வரும்
அவள் வீட்டிற்குள் நுழைந்தார்கள்
தடித்து இருந்தவன் தான் தலைவன்!
கருகருவென முடி கொண்டு ஒருவன்!
முட்டைகண் முழியுடன் ஒருவன்!
இளம் வயதில் இன்னொருவன்!
பூட்டிய வீட்டை
திறக்கவுமில்லை, உடைகவுமில்லை
குழாய் வாயிலாக சுவர் ஏறி, உள் நுழைந்து,
அவள் எந்த அறை என்று தெரியாமல்
அங்கும் இங்குமாய் தேடித்திறிந்தவர்கள்
இருட்டில் எதையோ தட்டிவிட
மின்விளக்கை நோக்கி பாய்ந்த கைகள் கண்டு
ஒலிம்பிக் வீரனை போல ஓட்டம் எடுத்தனர்!!!
நடுநிசியில் ஆட்களை கண்ட வீட்டு உரிமையாளர்,
நான்கு பேரையும் பிடித்து சிறையில் அடைக்க
பல முறை முயற்சித்தும் முடியவில்லை!!!
மீண்டும் மீண்டும் இது தொடர,
அவர்களை கொலை செய்து விட முடிவு செய்தார்!!!
இரண்டு நாட்களுக்கு பின்னர்,
துர்நாற்றம் வீசிய நிலையில்
வீட்டு மூலைக்கு ஒருவன் என
சடலமாக கிடந்தார்கள்...
மூக்கை பொத்திக்கொண்டு
🐀வால் பிடித்து தூரமாய் தூக்கி எறிந்தான்
கொலைகாரன் ஆன வீட்டு உரிமையாளன்!😍
$R!

எழுதியவர் : ஸ்ரீனிவாசன் (19-Jul-21, 6:00 pm)
சேர்த்தது : SRINIVASAN
பார்வை : 79

மேலே