Contractor நேசமணியுடன் நான்

:
#அரண்மனை ஆயினும் அதன் அழகை மேலும் அலங்கரிப்பது காயிலாங்கடை பொருட்கள் தான் என்பதை மக்களுக்கு உணர்த்திய மாமேதை!
#வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலை கற்றுக்கொடுத்து, மூன்று வேளை உணவும் தந்து, Apprentice/அப்பரசென்ட் என்ற உயர்ந்த பதவியையும் கொடுத்த உன்னத உள்ளம் கொண்டவன்!
#Engineer'ன் வேலை - தேவை உள்ள ஆணியை விடுத்து தேவையில்லாத ஆணியை புடுங்குவது என்பதை கற்றுத்தந்த படிக்காத மேதை!
#Contract தொழிலின் கஷ்டத்தை வெளிப்படையாய் சொன்ன வெள்ளந்தி!
#ஆடு மாடு மேய்ப்பதை விட, ஆறறிவு கொண்ட மனிதர்கள் கோவாலு, கொட்டாச்சி, வேலப்பன், கிச்சுணமூர்த்தி, இன்னும் 2 Apprentice வைத்து வேலை வாங்குவதில் இருக்கும் இன்னல்களை எடுத்துரைத்தவன்!
#Construction site'ல் Safety Helmet அணியாமல் வேலை செய்தால் ஏற்படும் விபரீதத்தை விளக்கிய விஞ்ஞானி!
இப்படி CIVIL ENGINEER'கள் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகளை 2001'ல சொன்ன கருத்துக்களை மக்கள் புரிந்து கொள்ள 18 வருடங்கள் ஆகிவிட்டது!
தலைவன் நேசமணி சுத்தியலால் தாக்கப்பட்டார் என்பதை என்னால் தாங்க இயலாமல் நேரில் சென்று பார்த்து போது நிகழ்ந்த சில உரையாடல்கள்:
எப்படி இருக்கீங்க'னு கேட்டேன்!
நல்லா இருக்கேன், இட்லி சாப்பிட்டேனு சொன்னாரு!
Civil Engineer வேலை எப்படி போகுதுன்னு கேட்டாரு!
கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு'னு சொன்னேன்!
கண்ணுல தண்ணி வச்சுண்டார்😢
உடம்ப பாத்துக்கோங்க'னு சொல்லிட்டு பிரிய மனம் இல்லாமல் நான் வாங்கிக்கொண்டுபோன HORLICKS 1 பாட்டிலயும், ஆரஞ்சு 4'யும் hospital செலவுக்கு மோடி பதவி ஏற்றவுடன் வெளியிடப்பட்ட 9000 நோட்டையும் குடுத்துட்டு வந்தேன்!!!
#நல்ல மனுஷன்...
#நல்லா இருக்கட்டும்...
#Civil Engineer
#Painting Contractor
#Neasamani
#Pray_For_நேசமணி

$®!

எழுதியவர் : ஸ்ரீனிவாசன் (19-Jul-21, 6:20 pm)
சேர்த்தது : SRINIVASAN
பார்வை : 97

சிறந்த நகைச்சுவைகள்

மேலே