நுளம்பு கொசு தொந்தரவின் போது தோன்றியது
#ரத்தத்திற்கு
ஜாதி-மதம்,
ஏழை- பணக்காரன்,
CM-PM,
மனிதன்-மிருகம்
என்ற பாகுபாடு இல்லை என்பதை உன்னில் இருந்தே உணர்கிறேன்!
#தேனீக்கள் பூக்களில் இருந்து தேனை எடுக்கும் போது பூவிற்கு சற்றும் வலிக்காமல் எடுக்கிறது,
நீ மட்டும் ஏனோ எங்களை வலியால் உன்னை வெறுக்க வைக்கிறாய்!
#வீட்டிற்கு விருந்தினர் வரும்பொழுது இன்முகத்தோடு வரவேற்பதே எங்களின் மரபு,
ஆனால் நீ வருவதற்கு முன்பே அடைக்கப்படுகிறது எல்லோரது வீட்டின் ஜன்னல் கதவுகள்!
#உன்னை சாதாரண கொசு என்று நினைப்பவர்களுக்கு தெரியாது,
உன்னை வைத்து இங்கு மிக பெரிய வியாபாரம் நடக்கிறது அதில் பிழைப்பது கொழுத்த பணமுதலைகள்(Corporates) என்று!
#உன்னால் ரத்த மாற்றம் (Blood Transfusion) செய்ய முடியும் எனில் சொல், என் உடம்பில் ஓடும் குருதி அனைத்தையும் தருகிறேன் தேவைபடுவோர்க்கு கொடு, முடியாதெனில் விலகி செல் உன்னிடம் என்னை நான் வீணடிக்க விரும்பவில்லை.
#இரவில் உனக்கு தூக்கம் வரவில்லையா?
நீ வருவாய் என எனதறயில் கொசு கரைசல் (Mosquito Liquidator), சுருள் (Coil) வைத்திருக்கிறேன்.
நிம்மதியாய் வந்து உறங்கிச்செல்!
#சோகங்களினால் தூக்கத்தை தொலைத்த நாட்களை விட உன் தொந்தரவினால் என் தூக்கத்தை தொலைத்த நாட்களே அதிகம்.
#நான் உறங்கும் போது என்னை தொந்தரவு செய்யாதே, முடிந்தால் என்னிடம் யுத்தம் செய்து என் ரத்தத்தை எடு.
#கொசு இனம் சிவில் இன்ஜினியரிங் படித்திருக்கும் என்று நினைக்கிறேன்,
ஏன் என்றால் தன் வாழ்நாளில் விடுமுறை இல்லாமல் உழைத்து கொண்டிருக்கும் இனம் அவர்கள் தானே!
#இத்தனை நாள் நீ கொடுத்த தொல்லையை மறந்து உன்னை மன்னித்து விடுகிறேன், என்னிடம் மன்னிப்பு கேள் முத்தமிட்டு வழி அனுப்பி வைக்கிறேன்,
மறுத்தால் Mosquito Bat' ல் உன்னை தகனம் செய்து விடுவேன்.
That #நாராயணா இந்த கொசு தொல்ல தாங்க முடியல டா மருந்தடிச்சு கொள்ளுங்கடா!!! Moment...
$®!