என் எண்ணங்களை 1, 2, 3,10 என்ற எண்களை கொண்டு வரிசை படுத்தினேன்

1. ஒன்றாய் இருக்க ஆசைப்பட்டு, ஒருவனாய் இருக்கும் நான்!
2. இரு மனங்கள் இணைந்த தருணத்தை தொலைத்து!
3. முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் மூழ்கி!
4. நான்கு திசைகளிலும் தேடி அலைந்து!
5. ஐம்புலன்கள் அற்ற உயிர் கொண்ட உடலுடன்!
6. ஆறுதல் உரைக்க ஆள் இல்லாதவனாய்!
7. ஏழு மலைகளை கடந்தும் தேடிவிட்டேன்!
8. எட்டாத உயரத்திற்க்கு சென்று விட்டாயோ!
9. ஒன்பது மணிகள் கோர்த்து!
10. பத்துப்பாட்டு ஒன்று எழுத நினைத்தேன், வலிகள் கலந்த வார்த்தைகளைக்கொண்டு!!!
இப்படி எண்ணற்ற எண்ணங்களை மட்டுமே எண்ணிக்கொண்டு நகரும் நாட்களின் எண்ணிக்கை தான் எத்தனை???

$®!

எழுதியவர் : ஸ்ரீனிவாசன் (19-Jul-21, 6:22 pm)
சேர்த்தது : SRINIVASAN
பார்வை : 125

மேலே