கன்னியர் கடமை - எழுசீர் ஆசிரிய விருத்தம்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா விளம் மா / விளம் விளம் மா)

குரவர்தாம் இயைந்து கொடுத்தில ராயிற்
..குமரவே ளனையவ ரேனும்
அருவரா நிற்பர் தந்தைதாய் தங்கள்
..ஆணையி னொழுகுகன் னியர்தாம்
உருவிலார் எனினுங் குரவருள் மகிழ்வுற்(று)
..உதவுறி னனையவர் தம்மைப்
பரவுவான் கடவு ளாகவே நினைந்து
..பண்பொடும் பயிலுவர் அன்றே. 78

- பிரபுலிங்க லீலை

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Jul-21, 8:11 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 74

மேலே