உன்னவளையும் முல்லையையும் என்னையும் கவிதை எழுது எழுது என்று

வெண்மை நிறத்தில்
ஒரு முல்லை மெல்லச் சிரிக்குது
வெண்ணிறத்தில் ஒருநிலவு
நீல வானில் தவழுது
ஒரு வெண்மைப் புன்னகை
உன் மௌன இதழில் மலருது
முல்லையும் உன் மௌன இதழும்
இணைந்து தேனைச் சிந்துது
அமுது பொழியும் நிலவோ
உன்னவளையும் முல்லையையும் என்னையும்
கவிதை எழுது எழுது என்று
தொந்தரவு செய்யுது !

எழுதியவர் : கவின் சாரலன் (20-Jul-21, 9:55 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 49

மேலே