அருவியில் நீ நீராடினால்
அருவியில் நீ நீராடினால்
அருவிக்கு ஆனந்தம்
ஆற்றில் நீ நீராடினால்
அலைகளுக்குக் கொண்டாட்டம்
புன்னகை இதழில் நீந்த நீ
நதியில் நீந்திடும் போது அசையும் விழிகளில்
நதியின் மீன்கள் வந்து பாடம் கற்கும்
ஆற்று மணல் வெளியில் நீ நடக்கும் போது
சிறு கற்கள் குத்தி நோகும் உன் பாதங்களுக்கு
ரோஜா இதழ்கள் தாமே உதிர்ந்து ஒத்தடம் கொடுக்கும்
காற்றினில் ஆடும் உன் கருங்க்கூந்தலுக்கு
தோட்டத்து மலர்கள் தங்களை சமர்ப்பணம் செய்யும்
கற்பனையில் திளைக்கும் என் மனம் சும்மா இருக்குமா
கவிதைகளை அருவியெனக் கொட்டும்