சின்னச்சின்னதாய்
ஆங்காங்கே
சின்னச்சின்னதாய்
முத்தம் பதித்து
கொஞ்சம் கொஞ்சமாய்
கொஞ்சிடவே
ஆசை ஆசையாய்
இருக்கேனடி...
வெட்ட வெளியில்
மொட்ட வெயில் சுட்டாலும்
கொட்டும் மழை அடிச்சாலும்
சுட்டும் உன்விழியை நானும்
காணவே காத்து இருக்கேனடி..
என்னுயிருக்கு நீ
உறவை தர வேணும்...
என்னுடலுக்கு நீ
உயிரை தர வேணும்...
அன்றிரவு நான் கண்ட கனவு நிஜமாக
இன்றிரவு நீ என்னோடு சேர்ந்து
உரையாட வேணும்...
உனக்கு ஏதாவது ஒண்ணுனா
என்நெஞ்சம் தாங்க முடியாம
அழுதே கண்களும்...
எனக்கு இருப்பது நீ மட்டும் தானடி..
உன்ன விட்டா வேற யாரடி...
சத்தியமா சொல்லும்
என்னுள்ளம்
நான்வாழும் காலமெல்லாம் இருக்கும்
என்காதலெல்லாம்
ஒருத்தி உனக்கெயென்று தானடி...
ஆயிரம்பேரிடத்து
நின்று பேசும் அனுபவம்
ஒருத்தி உன்னிடத்தே
நின்று பேசும் போது
அது தோன்ற கண்டேனடி..