காதல் கச்சேரி
என் இதயத்தில் நீ புகுந்தவுடன்
காதல் கனி ரசம் சுரக்க
தித்திக்கும் உன் குரலோசை
ஏழு சுரங்களை போல் ஒலிக்க
உன் மென்மையான விரல்கள்
என் இதய வீணையை தொட்டு
இன்னிசை மீட்டிட ...!!
நமக்குள் "காதல் கச்சேரி"
களைகட்ட ஆரம்பித்துவிட்டது ..!!
--கோவை சுபா