காதல்

பூக்களாய் நீ வீற்றிருந்தாய்
தேனியாய் நான் வந்தேன்
மரமாய் நீ நின்றாய்
மழையாய் உன்னை குளிர வைத்தேன்
அன்பென்னும் அருவியாய் உன்னை மூழ்க வைத்தேன்
மெய்சிலிர்த்து நீயும் நின்றாய்
கடல் அலையாய் நான் வந்தேன் உன் பாதங்களைத் தொட்டுத் தழுவ
கண்களாய் நீ இருந்தாய்
இமைகள் ஆகி உன்னை காத்தேன்
உன் மனதில் காதலனாக என்னை ஏற்காவிட்டாலும் காலம் வரை உன் காவலனாக ஏற்பாயா என் அன்பு பெண்ணே.

எழுதியவர் : மகேஸ்வரி (24-Jul-21, 7:20 pm)
Tanglish : kaadhal
பார்வை : 139

மேலே