ஒரு காதல் வானவில்

தொலைவில் கார்முகிலுக்கிடையில்
தாழ்மையுடன் வளைந்து
நிறங்களுக்கிடையில் சிரிக்கும்
ஒரு வானவில்

அருகில் வண்ணமலர்களுக்கிடையில்
மெல்லிய செவ்விதழ்கள் அசைய
விழி இமைகள் மெல்லக் கவிய
தோட்டத்தில்
ஒரு காதல் வானவில் !

எழுதியவர் : கவின் சாரலன் (25-Jul-21, 10:22 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 56

மேலே