காதல் அம்பு

அவள் எனைப் பார்த்தாள் வில்லாய்
வளைந்து கொஞ்சம் மேலேறியது அவள்
புருவம் அவள் விழியால் எனைத் தீண்ட
அதிலிருந்து விடுபட்ட பார்வை எனது
இதயத்தைத் தைத்து மலராய் மாறியது
புரிந்துகொண்டேன் அது அவள் விடுத்த
காதல் அம்பு என்பது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (25-Jul-21, 8:45 pm)
Tanglish : kaadhal ambu
பார்வை : 188

மேலே