எல்லா மனிதரும்

ஓரிடத்தில் இருந்து வேறிடம் செல்ல
ஒன்றும் செலவில்லை ஒருகாலத்தில்
குழுவாய் நடந்தபடியே உந்துதலோடு
வழியில் கிடைக்கும் எதையும் உண்ணவாறே
குளம் குட்டை ஏரி சுனை நீரை அருந்தியே

இன்றோ பயணத்திற்கு பெருஞ்செலவு
சாலை வரி வாகன வரி சுங்கவரி என்றும்
எரிபொருள் செலவு தங்கும் விடுதி செலவு
தண்ணீர் குடுவை உணவகச் செலவு
வாகனம் நிறுத்த காசு சுவாமி பார்க்க காசுவென

நிலைத்த விலையின்றி யாரு வேண்டுமாயின்
நிர்ணயித்துக் கொள்ளுகிற விலையில் எல்லாமும்
கழிவறை முதல் காதல் கொள்ளும் பூங்கா வரை
கட்டணங்களுடன் வரிகள் நம்மை வறுத்துவிடும்
நெருப்பாய் எங்கும் கனன்று கொண்டபடியே

அறிவியல் பொருட்களின் வரவால் எல்லாம் எளிதாய்
என்றாலும் பணமின்றி பஞ்சும் வேறிடம் அகலாது
தலையின் முடி முதல் காலின் நகம் வரையில்
எவைக்கும் ஏதோ ஒரு களிம்போ திரவமோ அலங்கரிக்க
குழந்தையில் சிறுநீர் மலம் சேகரிக்க ஒரு பையென

உழைக்கும் பணத்தின் பெரும்பகுதியின் செலவோ
எல்லா நோயையும் ஆக்கும் கள்ளப் பொருளுக்காக
எல்லா மனிதரும் மயக்க நிலையில் எதையோ
எதிர்பார்த்து இலக்கில்லாமல் கானல் நீரில் தாகம்
தீர்க்கலாம் என்ற எண்ணத்தில் முடிவு முடமே.
----- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (26-Jul-21, 9:44 am)
சேர்த்தது : நன்னாடன்
Tanglish : ellaa manitharum
பார்வை : 55

மேலே