அப்துல் கலாம் அய்யாவை போற்றி வணங்குவோம்
ஆறாத மனதையும் ஆறவைக்கும்
நம்பிக்கை வார்த்தைகள் மடை
திறந்த ஆற்று வெள்ளம் போல்
குறைவின்றி பெருக்கெடுத்து
அனைவரது வாழ்க்கையிலும்
ஓடிக்கொண்டே இருக்கும் .
குழந்தைக்கு துணை பெற்றோர்,
மாணவருக்கு துணை ஆசிரியர்,
தொழிலாளர்களுக்கு துணை முதலாளி,
மக்களுக்கு துணை மக்களால்
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு,
ஆனால் அனைவருக்கும் துணை
ஏன் பல்லுயிர் களுக்கும் துணை
மகத்தான மாமனிதர் அய்யா
அப்துல் கலாம் அவர்களின் தூய
வார்த்தைகள் புனிதமான அறிவியல்
சார்ந்த கருத்துக்களும். அவர் ஒரு அறிவு
அல்ல அல்ல குறையாத அட்சய பாத்திரம்.
அவர் இறந்து ஆறு ஆண்டுகள், அறுநூறு,
அறுபது ஆண்டுகள் ஆனாலும் என்றும்
எப்பொழுதும் நினைவுகள் அனைத்தும்
உயிரோட்டத்துடன் இருக்கும் அழிவே
கிடையாது. அவரை போற்றி வணங்குவோம்.