லென்ஸ் கண்ணுல
லென்ஸ் கண்ணால ஓன் மொகத்த
பதிச்சு வெச்சேனே ...
லங்ஸ் நெஞ்சுல ஓன் மூச்சுக்காத்த
புடிச்சு வெச்சேனே ...
அடியே கள்ளியே ...
என்ன ஒதச்சி ஒதறி போறயே
நா
ஒன்ன நெனச்சி கதறி அழுதே
தவியா தவிச்சே.,
உருகி ஒறஞ்சேனே ...
அடியே
தறுதல காதலுல
தனிமைக்கு துணை உண்டா ...
கடைசியில கண்ணுல
கேள்விக்கு விடை உண்டா ...
வாலிபம் தரும் வலியென்ன
மறைந்து போகும் மாயை தானா ...
உயிர்போவும் போது உயில் உனக்கு எழுதி வைத்திட தான்
உயிரொன்றை தவிர
பெரிதாய்
சொத்து வேறொன்றுமில்லையே ...
மீண்டும் ஒரு ஜென்மம் எடுத்து உன்னை பார்த்திட வேண்டுமே ...
உன் மைய்யல் என் மடியில் விழுந்து தவழ்ந்திட வேண்டுமே ...
எந்தன் காதல் கண்திறப்பாளா,
கண்ணகி.
உள் நுழைந்திருப்பாளா ...
எந்தன் உணர்வில் நிறைந்திருப்பாளா ...
ஆவலே ஆவலே ...
ஆதலால்
காதலே காதலே ...