மார்கழி தை வைகாசி
மார்கிழி தை வைகாசி
உம்மால் தானென் ரவுக்கையின்
"மார் கிழி" ந்திடலானது எனவே
நீயே தைத்துக்கொடு இல்லையேல்
புதிய ரவுக்கை வாங்கிக்கொடு
"தை" யேண்டியிது "மார்கழி "
கடுங்குளிர் கால மாதலாலென் பல்லெல்லாம் கிணாரம் கொட்டியது
உனைக் கட்டித் தழுவியதா லுந்தனது
கிழியாதிருந்த ரவுக்கை கிழிந்திட்டது
"வைகாசி " என்றாள் மனைவி
கனிமொழி மொழிந்திட்டாள்
காலணா கையிலில்லை
வேப்பூரான் போல் திருதிரு
வென ஆந்தை விழி விழித்து
போட்டானே பெரும் போடு
அடியே என் கனிமொழியே
ரவுக்கை இல்லாமலேயே நீயோ
வான லோக அழகியரிலும்
ஒரு படி எடுப்பாகவே காணத்
தோன்று கின்றாய் ஆதலால்
ரவுக்கை அணிவதை இன்றோடு
ஏறகட்டி விடு என்பானா பதியவன்
பட்டென சட்டென பொட்டென
கடுப்பாகினாள் கனிமொழியாள்
அடுப்பங் கரை நோக்கி வெடுப்பாக
தட்டுமுட்டு பாத்திரத்தை போட்டுடைக்க
புத்தம்புது ரவுக்கை வந்து காத்திருக்கு
சில கனிமொழிகள் அஞ்சி
கெஞ்சி காரியம் சாதிப்பார்
சில கனிமொழிகள் கொஞ்சி
கொஞ்சி காரியம் சாதிப்பார்
சில கனிமொழிகள் நொழைஞ்சி
செஞ்சி காரியம் சாதிப்பார்
இம்மொழிகளுக்கு பெயர் தான்
கனிமொழியோ என்னவோ
•••••••••••
ஆபிரகாம் வேளாங்கண்ணி "கண்டம்பாக்கத்தான்"