அன்னையின் ஓவியம்
அன்னையின் ஓவியம்.
அந்தி சாயும் நேரம் அது,
அன்னை வரைந்த ஓவியம் அது,
வானமதை சிவப்பாக்கி,
கரும்புள்ளி பல போட்டு( பறவைகள்),
நிலமதை நீலத்தால் நிரப்பி ( குளம்)
கரைதனை பச்சையால் கோடிட்டு (வயல்வெளி),
அன்னை வரையும் ஓவியம் அது,
அந்தி சாயும் நேரத்திலே.