துறவறம்

ராஜ வாழ்வை துறந்தான்
துறவறம் கொண்டான்
விஸ்வாமித்திரன் ...!!

மேனகை வந்தாள்
துறவறம் பூண்டவன்
முன்னே நடனம் ஆடினாள்..!!

மோனநிலை மாறி
மோக நிலைக்கு மாறியது
விஸ்வாமித்திரனின் மனம் ...!!

மேனகை மேல்
மோகம் கொண்டான்
துறவறம் துறந்தான் ..!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (29-Jul-21, 12:20 pm)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 127

மேலே