சாயம் போன சாமியார்

சாமியார் சாமியார் சாயம் போன சாமியார்;
சம்சார வாழ்க்கையை மறக்காத சாமியார்.
போலிச்சாமியார்;
பொல்லாத சாமியார்;
பொழுது போக்காய் துறவறம் பூண்ட சாமியார்;
மாயப் போர்வையைப் போர்த்தியே,
மயக்கித் திரியும் சாமியார்.

பொய்யுரை கூறியே,
புகழ்தேடும் சாமியார்.

ஆசா பாசம் அனைத்தையும்,
அறுக்காது,
ஆபாச வாழ்க்கையில் அடிஎடுத்து வைத்து
வாழ்ந்து வரும் சாமியார்;
ஆட்டம் காட்டும் சாமியார்;
அசிங்க செயல்களை,
அளவில்லாமல் செய்யும் சாமியார்.
அடுத்தவர்கள் வாழ்வை,
அவசர அவசரமாய் கெடுக்கத் துடிக்கும் சாமியார்.

கேள்வி ஞானம் மிகுந்த சாமியார்;
கெட்டதையே செய்யத் துடிக்கும் சாமியார்,
சாமியார் போர்வையில்,
சரச லீலை செய்யும் சாமியார்;
சல்லாபத்திலும்,
உல்லாசத்திலும் வாழும் சாமியர்;
சரளமாய் பொய்சொல்லும் சாமியார்;
சாத்திரங்கள் பல படித்தும்,
சத்தியமாய் கடைபிடிக்காத சாமியார்

சாயத்தை பூசியே;
சச்சரவில் மாட்டும் சாமியார்,
சாமிப்பெயரைச் சொல்லியே,
கொள்ளை லாபம் அடிக்கும்
கொடூர சாமியார்;
மாய வலையில் விழவைத்தே ,
மயக்கும் சாமியார்.

மனதில் விரசத்தைச் சுமந்தே;
மானத்தை வித்த சாமியார்.
மக்கள் கூட்டம் திரண்டிடவே,
மாயம் பல செய்யும் சாமியார்.

அப்பாவி மக்களை அழித்தே,
ஆசிரமம் கட்டிய சாமியார்.

ஆசீர்வாதம் என்ற பெயரில்,
அசிங்கத்தைத் தூண்டும் சாமியார்.

சீடர்கள் என்றே,
சிலரை சிந்தனைச் சலவைச்செய்து,
வீணர்களாய் வைத்திருக்கும்,
வில்லங்கம் பிடித்த சாமியார்.

எல்லோரும் கேலிச் செய்யும்,
போலிச்சாமியார்.

காவிவேட்டி கட்டியே,
காமலீலை செய்யும் சாமியர்;
பட்டை அடித்தே,
பாவங்களைச்செய்யும்,
பாழாய்ப்போன சாமியார்.

கொட்டும் பணத்தை,
கெட்டியாக பிடித்தே,
வாழும் சாமியார்.
மெய்ஞானம் பெயரைச்சொல்லியே,
மேனியைப்பிடிக்கும் சாமியார்.

குற்றம் பல செய்திடினும்,
குதூகலமாக இருக்கும் சாமியார்,
குறைகள் பல இருப்பினும்,
கும்மாளம் போடும் சாமியார்.

மாடர்ன் சாமியார்,
ஒரு மர்ம சாமியார்.
நெற்றியில் திரு நீறு,
நீண்ட சடை,
ஒட்டியே கடக்கும் உத்திராட்சக் கொட்டை,
உருளத்துடிக்கும் கமண்டலம்,
தலையிலே முண்டாசு,
தாடியுடன் காவிவேட்டி,
கையில் ஒரு கட்டை,
பட்டப்பகலில் பகவான் கீர்த்தனை,
பகல் சாய்ந்து விட்டால்,
பரமன் பெயரில் பல தாண்டவம்,
சுத்த ஞனா சித்தியில் சுகம் கானத்துடிக்கும் பித்தனார்.

விட்டில் பூச்சாய் விழவைத்தே,
விளக்காய் எரிந்து,
விவரமாய் அணைக்கத் துடிக்கும் வில்லங்க சாமியர்,
ஆண்மீகம் கடைபிடிக்காது
ஆண்டவன் பிரதிநிதி என்று சொல்லும்
அசிங்கமான போளிச்சாமியார்,
சாயம் போன சாமியார்,
சைத்தானை மனதில் வைத்திருக்கும் சாமியார்

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (29-Jul-21, 11:01 pm)
பார்வை : 63

மேலே