கன்னத்தில் நியூட்டன் ஆப்பிள் குழிந்து
எண்ண மெல்லாம் விரிந்து சிரிப்பாய்
வண்ணப் பூமலர் போலென் உள்ளே
கண்ணில் நீலயெழில் ஓவியம் தீட்ட
எண்ணத் தில்நீஎன் னென்னவோ சொல்ல
கன்னத் தில்நியூட்டன் ஆப்பிள் குழிந்து
கீழே யேவிழாமல் என்னை ஈர்க்க
உன்னி டம்நான் வந்தேன் ஈர்ப்பின்
தாக்கத் தால்பாதிக் கப்பட்டு இங்கே !
--------------------------------------------------------------------------------------------------------------------------
இது ஆசிரியப்பா
எல்லாம் நான்கு சீர் கொண்ட அளவடிகளால் ஆனதால்
இது நிலை மண்டில ஆசிரியப்பா
உன்னிடம் வந்தேன் ஈர்ப்பின் ----என்று கடைசிக்கு முந்தின அடியை
மூன்று சீர்களால் ஆக்கினால் இது நேரிசை ஆசிரியப்பா ஆகிவிடும்